ஒரு அரசன் வெட்டியதால் இவர் வெளிப்பட்டதாகக் கூறுவர். மூலவரின் மீது வெட்டுப்பட்ட காட்சி உள்ளது. இக்கோயில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோயிலாகக் கருதப்படுகிறது. இந்த நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் இடர் தீரும் என்பது நம்பிக்கை.
மூலவர் 'மகாலட்சுமீஸ்வரர்,' என்னும் திருநாமத்துடன், உயரமான பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'உலகநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இலட்சுமியும், பரசுராமரும், காமதேனுவும் பூசித்த தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும், சுந்தரர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயில் அருகிலேயே அர்ச்சகர் வீடு உள்ளது.
|